- Details
- 532views
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன்
மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பமானது.
இந் நிகழ்வில் 5 பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ,சர்வ மத தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட செயலாளர் திரு .சி .ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருவாட்டி . சரஸ்வதி மோகநாதன் (செயலாளர் – உள்ளூராட்சி அமைச்சு வடக்கு மாகாணம்.) அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், “மன்னெழில்” சிறப்பு மலர் வெளியீடும், பிரதேச செயலகங்களினூடாக தெரிவு செயப்பட்ட 25 கலைஞர்களுக்கு “மன்கலை சுரபி” விருது வழங்கலும் இடம்பெற்றது.
இவ் விழாவில் பட்டிமன்றம், நாடகம், நடனம் , நாட்டுகூத்து என பல்வேறு நிகழ்வுகள் மேடையேற்றபட்டன.
தகவல்
திரு .இ .நித்தியானந்தன்
மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
மன்னார்.
- Details
- 662views
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது .
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .
காலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .
- Details
- 718views
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.
இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.
- Details
- 915views
மன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 15ற்கும் மேற்பட்ட போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந் நிகழ்விற்குரிய அனுசரணைகளை, அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம்,ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேனீ - மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி அமைப்பு என்பனவும் மேற்கொண்டிருந்தன.
- Details
- 595views
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க சபை போதகர் ஏ.நிமால் கூஞ்ஞ, வண.தர்மகுமார குருக்கள், வண.திரு.ஜி.அன்ரனி டேவிற்சன் மன்னார் நகர சபை தவிசாளர், வண.திரு.எஸ்.எச்.எம்.முஜாகிர் மன்னார் பிரதேச சபை தவிசாளர், வண.திரு.ஏ.ஜி.ஏ.சுபீகான் முசலி பிரதேச சபை தவிசாளர், மன்னார் நகர சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்(மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு), திரு.சபுர்தீன் சிரேஸ்ட சட்டத்தரணி, திரு. கதிர்காமநாதன் சைவ மத ஒன்றியம்,திரு.திலீபன் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், திரு விக்ரமசிங்க மன்னார் நகர பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.புஸ்பகுமார சிலாவத்துறை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.வதுலியத்த இலுப்பைக்கடவை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.சசந்த அடம்பன் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.இ.ஜி.குணரத்ன உதவிஃதலைமையிடத்து ஆய்வாளர் மன்னார், திரு உடவத்த தலைமையிடத்து ஆய்வாளர் தலைமன்னார், திரு.சோமஜித் பேசாலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, CCT நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜெகான் பெரேரா, திரு ஜோ வில்லியம் தவிசாளர், மன்னார் மற்றும் மடு பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மத ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
கடந்த 21ம் திகதி குண்டுதாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து மன்னார் மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
- 01. மன்னார் மாவட்டத்தில் 06 பௌத்த ஆலயங்களும், 142 கிறிஸ்தவ ஆலயங்களும், 80 முஸ்லிம் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அங்கு வருகை தருகின்ற அனைத்து மக்களும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.
- 02. தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பினால் இந்தியா செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
- 03. பொலிஸ் உதவியுடன் சாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- 04. வழிபாடுகள் நடைபெறும்போது தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
- 05. பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாட்களிலும் பின்வரும் நாட்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்விடயம் தொடர்பான அறிக்கைகள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
- 06. யாருக்கேனும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் வெடிகுண்டுகளுக்கு மதம் மொழி தெரியாது என்பதால் இந்நாட்களில் நாம் மிக அவதானமாக இருக்குமாறும் எவரிலேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்காக மக்களின் விசேட உதவிகளை தாம் நாடி நிற்பதாக கூறினார்.
- Details
- 752views
கிளை /பிரிவு : நிதி |
||||||
இல |
மக்களுக்கு வழங்கப்படும் சேவை |
தேவை படும் ஆவணம் |
சேவை நிறைவு செய்ய தேவை படும் காலம் |
சேவை கட்டணம் |
சேவை தொடர்பான நேரடி அரச அலுவலர் |
|
பெயர் |
தொலைபேசி இல |
|||||
01 |
பிரதேச செயலகங்களில் காணப்படும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகளை தீர்த்தல். |
உரிய பிரச்சனை தொடர்பான ஆவணங்கள் |
02 வாரம் |
இல்லை |
பிரதம கணக்காளர் |
023-2222214 |
02 |
சேவை வளங்குனர்களை வருடாந்தம் பதிவு செய்தல் (நவம்பர் மாதம் ) |
1.உரிய விண்ணப்பம் 2.வியாபார அல்லது கம்பனி பதிவு சான்றிதழ் பிரதி 3.பணம் செலுத்தியமைக்கான பற்று சீட்டு 4.ஊள்ளுராட்சி சபையில் பெறப்பட்ட வியாபார அனுமதி பத்திரம் நிழற் பிரதி 5 ஒப்பந்தகாரராயி ன் ICTAD/CIDA நிறுவனத்தில் பதிவுக்கான உறுதிபடுத்தபட்ட நிழல் பிரதி 6.உணவு வழங்கல் சேவையாயின் குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் /வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்ட சான்றிதழ் பிரதி |
06 வாரம் |
500/- (மாற்ற மடையக்கூடும்) |
பிரதம கணக்காளர் |
023-2222214 |
- Details
- 1314views
தலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் நேர முகாமைத்துவம், வினைத்திறனான தொடர்பாடலின் அவசியம், தேவைகளை இனங்காணல் போன்ற விடையங்கள் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது..
- Details
- 1377views
சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- Details
- 949views
கூட்டறிக்கை – 28.03.2019
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.
உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக,
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ்,
மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று மு.ப 09.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக தாமரை தடாகம் (ICT UNIT) மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மேலதிக அரசாங்க அதிபர் தமது உரையில் உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுள்ளது என்றும் இங்கு சமூகம் அளித்து இருக்கும் அனைவரும் அமைச்சின் நோக்கம் நிறைவேறவும் மன்னார் மாவட்டம் இணைத்தள வடிவமைப்பு மற்றும் இற்றைப்படுத்தலை முன்னேடுத்து செல்ல பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் மாவட்ட செயலக ICT துறைக்கு பொறுப்பான அலுவலர்களும் 5 பிரதேச செயலகங்களில் தலா 02 அலுவலர்கள் வீதம் 10 அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
ICT பிரிவில் கடமை புரியும் திரு.க .பரத் என்பவரால் Internet, Intranet, Extranet சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு Joomla மென்பொருளின் தன்மை, அது இயங்கும் விதம், அதன் உட்கட்டமைப்பு, Software, Freeware, Shareware போன்றவைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தேடல் பொறிகளும்,அரச இணையத்தளங்களும் அதில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களும் தேடல் பொறியின் இயல்பான கட்டமைப்பு தொடர்பான விடயங்களும், இணையத்தளங்களே எதிர்கால பிரதான தகவல் ஊடகம் என்பது பற்றியும் அவற்றைப் பாதுகாப்பானதாகவும்,வினைத்திறன் மிக்க வகையிலும் அரச சார்பான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் (05) இணைய தளங்கள் பார்வையிடப்பட்டு ,அவற்றுடன் பிற மாவட்ட இணையத்தளங்களும் ஒப்பு நோக்கி அவற்றில் இருக்கும் நல்ல விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டது.
உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்தின் இணைப்பான மாவட்ட மட்ட பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற படிவத்துக்கு அமைவாக எமது மாவட்டத்திற்குரிய 06 இணைய தளங்களும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டன.
11.00 am – 11.30 am - சிற்றுண்டி இடைவேளை (Tea brake)
மேற்படி படிவத்திற்கு அமைய அவ் ஆய்வில் இனங்காணப்பட்ட இற்றைப்படுத்தப்படாத(Update) தரவுகள் /தகவல்கள் இனங்காணப்பட்டு அந்ததந்த பிரதேச அலுவலர்களினால் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டது. மேற்படி இற்றைப்படுத்தலின் போது இணையதளத்தின் இயக்க வேகமானது வெகுவாக குறைத்து இருந்ததால் இற்றைப்படுத்தலின் வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் மேற்படி விடயத்திற்கு பொறுப்பதிகாரியான இலங்கையின் ICTA வில் கடமைப்புரியும் கருத்திட்ட முகாமையாளர் பாக்யா குமாரசிங்க அவர்களுக்கு மின்னஞ்சல் ,தொலைபேசி ஊடாக முறைப்பாடும் அளிக்கப்பட்டது .
தொடர்ச்சியாக அலுவலர்கள் தரவு இற்றை படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விடயங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த படியினால்,அவற்றிற்கு என தனியான கோப்பு (File) முகாமைத்துவம் செய்வதுடன் உரிய அலுவலர்களின் அனுமதிப்பெற்று அவர்களின் மேற்பார்வையில் செய்திகளை இற்றைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
1.30 pm -2.30 pm – lunch time
மேலும் மேலதிக செயலாளரினால் இணைக்கப்பட்ட மேற்படி கடிதத்தின் படிவத்திற்கு அமைவாக 31.03.2019 திகதிக்கு முன்னராக இற்றைப்படுத்தும் பணிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக இவ் இற்றைப்படுத்தல் பணியில் பிரதேச செயலக பிரிவில் கடமை புரியும் அலுவலர்கள் எதிர் நோக்கும் கீழ்வரும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டது.
- மேற்படி இற்றைப்படுத்தல் பணிக்கான கடமை அறிவுறுத்தல் கடிதமானது குறிப்பிட்ட அலுவலர்களுக்கு இதுவரையில் கையளிக்கப்படாமை.
- கணினி மற்றும் இணைய வசதி குறைவாக உள்ளமையும் பிரதானமாக பிரச்சினையாக இனங்காணப்பட்டது.
3.15 pm -3.30 pm – Tea time
அலுவலர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் சேகரிக்கப்பட்டு தொடர்பாடல்களை மேலும் இலகுபடுத்தல் தொடர்பான “ICT MANNAR” எனும் பெயரில் Viber மூலம் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இப் பயற்சி தொடர்பான நிறை, குறைகள் பயிற்சியில் பங்குபற்றியவர்களிடம் வினவப்பட்டதுடன் பிற்பகல் 4.30 மணியளவில் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் தொடர்பான செயலமர்வு/கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.
- Details
- 1233views
வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
- Details
- 520views
அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.
- Details
- 530views


- Details
- 929views
யுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என 200ககும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- Details
- 1360views
பிரதேச செயலக பிரிவு ரீதியாக நிலபரப்பு.
Divisional Secretariat |
Area (Km²) |
Percentage |
Mannar Town / மன்னார் நகரம் |
226.9 |
11.33 |
Nanattan / நானாட்டன் |
129.3 |
6.46 |
Musali / முசலி |
474.2 |
23.69 |
Manthai West / மாந்தை மேற்கு |
658.9 |
32.91 |
Madu மடு |
512.8 |
25.61 |
Total /மொத்தம் |
2002.1 |
100.00 |
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
- Details
- 821views
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- Details
- 840views
மன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டு கண்டல் மரங்களை நாட்டி வைத்தனர் இந் நிகழ்வுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இயங்கும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள: சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.



- Details
- 1032views
It is evident that this District has its historical importance for many reasons and being one of the main coastal areas of the country, in the past , the western invaders had, had landed here and the monuments left behind by them bear witness and to mention some of them are the “Forts” built at Mannar-Town and Arippu. The Ramar-bridge, hanging-bridge, Thiruketheeswaram-temple, Madhu-St.Mary’S Church, Light-house and the huge Baobab-tree speak of themselves with regard to the historical importance of this District.
This bridge was construct of sand and Lime-stones, in order to connect India and Sri Lanka. Bridge is called as Adam-bridge (Ramar-bridge) in the Tamil language, as Adams-bridge in the English-language and as Rama-sethu, in the language of Malayalam. This appears to be a sand-bund in length of 30 kilometres and 1.5 meter – 3.5 meter, above the water –level. In accordance with the historical entries it is said that there had been transportation using this bridge prior to the 15th Century.
Mdhu Church
- Details
- 454views
ஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் கடந்த 16.03.2019 சனிக்கிழமை அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உள்ளக, உள்நாட்டலுகல்கள் , மாகான சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரைக்கு இணங்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட செயலக காணி பதிவகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
விருந்தினர் வரவேற்பு, வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக உறுதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்த இருவருக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திணைக்கள தலைவர்கள் சட்டத்தரனிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
- Details
- 1889views
மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவும் சாதனைப்பெண்கள் கௌரவிப்பு விழாவும் 08.03.219 அன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ. மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ் வசந்தகுமார், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிறின்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் மன்னார் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலர்கள், மன்னார் நகர பிரதேச செயலக அலுவலர்கள் , மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், சிறப்புரை என்பவற்றுடன் மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பெண்களுக்கு 'சாதனைப்பெண்கள்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஹிட் (HIT) சந்தைப்படுத்தல் நிறுவனம், வேல்ட் விசன் , TVS, ஒஸ்ரியா நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டன.
மனானார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டில் சாதனைப்பெண்கள் விருதினை பெற்றுக்கொண்டவர்கள் விபரம்
1) வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரெலா யூட் ரதினி (மருத்துவ துறை: இளைப்பாறிய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
2) திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் (கல்வித்துறை : இளைப்பாறிய மன்னார்,மடு வலயக்கல்விப் பணிப்பாளர்)
3) திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் (கல்வித்துறை : இளைப்பாறிய மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்)
4) திருமதி விக்ரர் பெப்பி பெப்பெற்றுவா மதுரநாயகம் பீரிஸ் ( கல்வித்துறை, எழுத்தாளர்: இளைப்பாறிய உதவிக்கல்விப்பணிப்பாளர்)
5) திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் (நிர்வாகத்துறை: மேலதிக பிரதம செயலாளர். வட மாகாணம்)
6) கலாநிதி திருமதி கிமலதா ராஜேஸ்வரன் (கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண் - மன்னார் மாவட்டம்)7
7) செல்வி வெற்றிச்செல்வி சந்திரகலா (எழுத்தாளர், உளசமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சார் செயற்பாட்டாளர்)
8) செல்வி அன்ரனி ஜெனிபர் அருள்மொழி லம்பேட்( மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர். பாடகி, எழுத்தாளர்)
9) திருமதி நேசராசா சுகந்தினி (மாற்றாற்றல் உள்ள பெண், பரா ஒலிம்பிக் 2020ற்கு தெரிவாகியுள்ளவர்)
10) செல்வி செபமாலை பெனடிற்றா (மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர்)
11) செல்வி மரியநாதன் ஜேசப்பின் பிரஸ்ஷh லேனா (ஊடகத்துறை - நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
12) திருமதி எம். கௌரி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
13) திருமதி செலமன்ராஜ் சுபாஜினி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
14) திருமதி வீரபுத்திரன் கலாதேவி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
15) திருமதி விக்கிரமசிங்க சவரியம்மா (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
16) செல்வி பாலகிருஸ்ணன் பிரியங்கா (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
17) செல்வி சந்தியோகு ஆன் பைரவி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
18) செல்வி சௌந்தர்ராஜன் பிரியதர்சினி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
19) திருமதி ரமேஸ் வசந்தராதேவி (சமூக சேவையாளர்)
20) திருமதி செயஸ்ரியாம்பிள்ளை சத்தியகுமாரி (சமூக சேவையாளர்)
- Details
- 1862views
அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை மன்னார் மாவட்ட செயலாளர் சி. எஸ் மோகன்றாஸ் அவர்கள் மடு நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கிவைத்தார்.
- Details
- 1337views
இலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலமையில் இன்று(4)காலை யில் நடைபெற்றது.

- Details
- 1147views
- சிவில் பதிவு
- பிறப்பு பதிவு
- வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு
- மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்
- விவாகப் பதிவு
- பிறப்பு பதிவு
- சான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்
- கண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்
- முஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்பொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்
- திருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்
- பொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து
- கண்டிய திருமண விவாகரத்து
- முஸ்லீம் திருமணம்
- விவாகரத்து சான்றிதழ் பெறல்
- இறப்பு பதிவு
- வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- வெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்
- தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- பதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- பதிவுசெய்யப்படாத இறப்பு பதிவு
- Details
- 1718views
Hazard, Vulnerability and Risk Analysis
Mannar district has been continuously affected by floods, drought, and health hazards. Coastal areas of the district and the island are facing a threat of tsunami. Being continuously affected by sudden floods, drought and health hazards.
Mannar district had not experienced flooding in the recent past; however in December 2010 and early 2011 the district experienced flood situation resulting in displacement of war affected returnees and other ordinary communities. These floods affected Manthai West, Madhu, Mussali, Mannar Town and Nanattan DS divisions. The flood experienced in Mannar district was not caused due to rainfall, but resulted due to the overflowing of tanks in Anuradhapura, Vavuniya, Mullaitivu and Kilinochchi districts.
Main disasters affecting the District
Table 1.1 - History of Disasters and Probability of Disaster Episodes in the District
(Remarks may indicate the duration, severity, intensity of rain causing the hazard, magnitude of the earthquake causing the tsunami etc.
Hazard Type |
Year & month of Occurrence |
Affected Divisions |
frequency |
Impact on population |
Impacts on infrastructure, assets, environment |
|||
Deaths |
Displaced Members |
Affected Members |
||||||
Flood |
2010 Dec |
05 |
Once year |
01 |
8,250 |
26,347 |
Damaged |
|
2011 Nov |
05 |
Once year |
01 |
26,876 |
45,650 |
Damaged |
||
2012 Dec |
05 |
Once year |
Nil |
10,281 |
26,315 |
Damaged
|
||
2014 Dec |
05 |
Once year |
Nil |
6381 |
6381 |
Damaged |
||
2015 Nov |
03 |
Once year |
Nil |
4040 |
16023 |
Damaged |
||
Cyclone |
2012 Nov-Dec |
02 |
Once year |
Nil |
41 |
41 |
House Damaged |
|
Tsunami |
2004 Dec |
00 |
Once year |
Nil |
Nil |
Nil |
Nil |
|
Drought |
2012June |
05 |
Once year |
Nil |
Nil |
14,270 |
||
2013 June |
05 |
Once year |
Nil |
Nil |
38,583 |
|||
2014 June |
05 |
Once year |
Nil |
Nil |
76870 |
|||
Epidemic |
2009 |
03 |
Two time |
Nil |
Nil |
150 |
Cultivation and House Damaged
|
|
2010 |
02 |
Two time |
Nil |
Nil |
98 |
|||
2011 |
03 |
Two time |
Nil |
Nil |
224 |
|||
2012 |
02 |
Two time |
Nil |
Nil |
167 |
|||
2013 |
02 |
Two time |
Nil |
Nil |
58 |
Table 1.2 Main hazards per division
Each DS division in Mannar district is prone to different types of hazards in different time periods
The table below gives an analysis of trends and types of hazards and their trends
Division |
Type of Hazard |
Possible areas to be affected |
Best case scenario |
Worst case scenario |
Mannar Town |
Tsunami, Cyclone, Flood, Dengue & Drought |
Many coastal areas in Mannar Town, Nanattan, Mussali and Manthai West DS divisions are prone to tsunami. All division in the district are prone to floods. As there are no proper drainage/sewage system, during and after rainy season Mannar town division is prone to Dengue and water borne diseases. Mussali, Manthai West, Madhu and Nanattan DS division are very vulnerable to drought from May – August. |
Rain fall in Mannar district contribute very less for the floods. Disease outbreak could be managed with the available resources in the district. Major tanks in the district have been renovated and the tank bunds are strengthened. |
The floods caused by water from Overflowing tanks in the surrounding districts such as Anuradhapura, Vavuniya, Killinochchi and Mullaitivu. Floods in main access route to the districts hinder transports of relief and emergency evacuations. Many coastal areas are prone to tsunami; especially Mannar island is very vulnerable to tsunami. |
Nanattan |
Tsunami, Wild Animal Attack, Flood, & Drought |
|||
Mussali |
Tsunami, Flood, Cyclone, Wild Animal Attack, & Drought |
|||
Manthai West |
Tsunami, Wild Animal Attack, Flood & Drought |
|||
Madhu |
Flood, Cyclone, Wild Animal Attack & Drought |
1.3.2 Hazards and Vulnerability Assessment
Table: Hazardous Months
Hazard |
Probable Time of Occurrence |
Potential Impact |
Last Reported Year |
Floods |
Seasonal monsoon between Oct - Jan |
Though all DS divisions in the district are prone to floods, probability of floods depend on the highest rainfall in other districts around Mannar District and also the opening of sluice gate /overflowing of water from tanks in other districts. The flood will result in displacement of people living close to major tanks in Mannar. Major flood in the mainland of Mannar can also cut the access route to Mannar. |
Feb 2011, total 15,301 people (4,193 families) affected by floods |
Drought |
July – Sep |
Mannar is one of the districts that receive low rate of rainfall in the country. Many people in mainland of Mannar District are involved in cultivation activities for their livelihood. Famers depend on rain water for Maha season and involve in tank-irrigated cultivation in Yala season. Total cultivable land in Mannar district is 37,160 ha and most of these areas will get affected due to drought. Only people close to major tanks can do cultivation, but that sometimes becomes difficult depending on the rainfall of the year. Drought creates demand drinking water supply in the coastal areas. |
|
Outbreak of Disease/ Epidemics |
April - August |
Outbreak of dengue and other communicable disease are mostly limited to the urban and semi-urban areas in the district. However, this can be controlled by proper sewage system, popper disposal of garbage and increasing awareness. Due to high density of population in urban areas in Mannar district, there are possibilities of quick spread of communicable diseases. Spread of diseases may be accelerated due to lack of proper sewage/drainage facilities in urban areas. Filling of water stagnation areas and settlement of people in floods prone area in Mannar can also contribute to the spread of diseases. |
Past history of hazards indicates that dengue and other communicable diseases can be controlled by proper action by government departments which do not require much external support |
Cyclone |
Jan - December |
Mannar would be affected by cyclone based on the depression in Indian ocean. The coastal areas will be affected by Cyclone and recent Cyclone Makasenan also affected Mannar. Fishing is the main income generation activity in the coastal areas. Heavy Cyclone can cause destruction to the life and livelihood and infrastructure to the population. Especially, Mannar Island is very vulnerable as its sounded by sea. |
|
Tsunami |
Tsunami will create much greater destruction to the district as almost every DS division except Madhu has a long costal belt. Fishing is the main income generation activity in the coastal areas. Tsunami can cause mass destruction to the life and livelihood and infrastructure to the population. Especially, Mannar Island is very vulnerable for Tsunami. |
Table: Seasonality of Hazardson Mannar District
Hazards |
Jan |
Feb |
Mar |
Apr |
May |
Jun |
Jul |
Aug |
Sep |
Oct |
Nov |
Dec |
NEM |
FIM |
SWM |
SIM |
NEM |
||||||||
Floods |
X |
X |
X |
X |
||||||||
Cyclone |
X |
X |
X |
|||||||||
Epidemic |
X |
X |
X |
X |
X |
X |
X |
|||||
Drought |
X |
X |
X |
X |
X |
X |
||||||
Lightining |
X |
X |
X |
X |
X |
X |
||||||
Tsunami |
||||||||||||
HE Conflict |
X |
X |
X |
X |
X |
X |
||||||
Sea Wave |
X |
X |
X |
X |
||||||||
Coastal Erosion |
X |
X |
X |
X |
X |
X |
X |
X |
X |
X |
X |
X |
Hazard Frequency
Hazard |
Frequency |
Vulnerable divisions |
Floods |
Every year |
Mannar, Manthai west, Madhu, Nanattan and Musali divisions |
Cyclone/High wind |
Every year |
Mannar, Manthai west, Madhu, Nanattan and Musali divisions |
Drought |
Every year |
Mannar, Manthai west, Madhu, Nanattan and Musali divisions |
Epidemic |
Every year |
Mannar, Manthai west, Madhu, Nanattan and Musali divisions |
Sea surge / Storm surge |
Every year |
Mannar, Manthai west, Nanattan and Musali divisions |
Table: Seasonality of Epidemics (specify)- as applicable
Infectious diseases reported by months in MOH area-2009
S.No |
Disease |
Jan |
Feb |
Mar |
Apr |
May |
Jun |
Jul |
Aug |
Sep |
Oct |
Nov |
Dec |
Total |
1 |
Typhoid |
16 |
13 |
1 |
1 |
1 |
6 |
9 |
2 |
6 |
6 |
2 |
3 |
66 |
2 |
Dysentry |
1 |
- |
- |
3 |
16 |
2 |
6 |
6 |
7 |
9 |
6 |
18 |
74 |
3 |
Clinical Malaria |
3 |
2 |
- |
- |
- |
- |
- |
1 |
- |
- |
- |
45 |
51 |
4 |
Viral Hepatitis |
2 |
1 |
4 |
7 |
12 |
3 |
9 |
3 |
4 |
8 |
- |
1 |
54 |
5 |
Tuberculosis |
4 |
1 |
3 |
1 |
3 |
4 |
2 |
3 |
1 |
1 |
3 |
2 |
28 |
6 |
Dengue |
2 |
- |
- |
- |
- |
- |
- |
1 |
- |
- |
- |
8 |
11 |
7 |
Meningitis |
- |
1 |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
1 |
8 |
Chickenpox |
9 |
17 |
53 |
13 |
21 |
19 |
15 |
24 |
4 |
2 |
1 |
1 |
179 |
9 |
Leptospirosis |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
0 |
10 |
Rabies |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
0 |
Total |
37 |
35 |
61 |
25 |
53 |
34 |
41 |
40 |
22 |
26 |
12 |
78 |
464 |
Source: RDHS Office, Mannar
Infectious diseases reported by months in MOH area-2010
S.No |
Disease |
Jan |
Feb |
Mar |
Apr |
May |
Jun |
Jul |
Aug |
Sep |
Oct |
Nov |
Dec |
Total |
1 |
Typhoid |
4 |
6 |
1 |
2 |
1 |
4 |
1 |
2 |
3 |
1 |
1 |
3 |
29 |
2 |
Dysentry |
8 |
4 |
1 |
1 |
2 |
2 |
8 |
1 |
8 |
2 |
3 |
- |
40 |
3 |
Clinical Malaria |
1 |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
2 |
1 |
4 |
4 |
Viral Hepatitis |
2 |
3 |
3 |
0 |
- |
- |
2 |
1 |
1 |
1 |
- |
1 |
14 |
5 |
Tuberculosis |
0 |
2 |
1 |
4 |
1 |
- |
2 |
- |
2 |
4 |
1 |
6 |
23 |
6 |
Dengue |
16 |
21 |
12 |
16 |
1 |
29 |
78 |
159 |
53 |
18 |
11 |
7 |
421 |
7 |
Meningitis |
1 |
0 |
1 |
- |
- |
- |
1 |
- |
- |
- |
- |
- |
3 |
8 |
Chickenpox |
1 |
- |
1 |
1 |
4 |
- |
- |
- |
- |
1 |
- |
- |
8 |
9 |
Leptospirosis |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
9 |
9 |
10 |
Rabies |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
0 |
Total |
33 |
36 |
20 |
24 |
9 |
35 |
92 |
163 |
67 |
27 |
18 |
27 |
551 |
Source: RDHS Office, Mannar
Infectious diseases reported by months in RDHS Mannar-2011
S.No |
Disease |
Jan |
Feb |
Mar |
Apr |
May |
Jun |
Jul |
Aug |
Sep |
Oct |
Nov |
Dec |
Total |
1 |
Food poisioning |
- |
- |
- |
- |
74 |
3 |
- |
- |
4 |
- |
- |
- |
81 |
2 |
Dengue fever |
5 |
3 |
3 |
1 |
2 |
2 |
1 |
1 |
- |
15 |
8 |
28 |
69 |
3 |
Tuberculosis |
7 |
3 |
- |
1 |
3 |
3 |
2 |
5 |
1 |
4 |
1 |
6 |
36 |
4 |
Dysentry |
- |
1 |
- |
1 |
1 |
1 |
3 |
3 |
4 |
2 |
4 |
6 |
26 |
5 |
Typhas fever |
5 |
8 |
1 |
- |
- |
- |
1 |
1 |
- |
1 |
- |
4 |
21 |
6 |
Chicken pox |
- |
- |
- |
- |
4 |
2 |
- |
- |
4 |
1 |
3 |
1 |
15 |
7 |
Malaria |
7 |
3 |
3 |
- |
1 |
- |
- |
1 |
- |
- |
- |
- |
15 |
8 |
Enteric fever |
1 |
1 |
- |
- |
- |
2 |
4 |
- |
1 |
- |
4 |
- |
13 |
9 |
Mumps |
- |
- |
- |
- |
- |
1 |
- |
- |
4 |
1 |
1 |
- |
7 |
10 |
Meningitis |
- |
- |
- |
- |
1 |
- |
- |
- |
- |
- |
1 |
1 |
3 |
Total |
25 |
19 |
7 |
3 |
86 |
14 |
11 |
11 |
18 |
24 |
22 |
46 |
286 |
Source: RDHS Office, Mannar
Infectious diseases reported by months in RDHS Mannar -2012
S.No |
Disease |
Jan |
Feb |
Mar |
Apr |
May |
Jun |
Jul |
Aug |
Sep |
Oct |
Nov |
Dec |
Total |
1 |
Food poisioning |
8 |
0 |
5 |
0 |
0 |
0 |
0 |
2 |
0 |
1 |
0 |
0 |
16 |
2 |
Dengue fever |
33 |
6 |
6 |
5 |
7 |
5 |
2 |
1 |
2 |
2 |
10 |
18 |
97 |
3 |
Tuberculosis |
2 |
5 |
9 |
4 |
4 |
4 |
2 |
4 |
8 |
8 |
3 |
10 |
63 |
4 |
Dysentry |
3 |
0 |
3 |
3 |
1 |
1 |
1 |
0 |
3 |
4 |
8 |
5 |
32 |
5 |
Typhas fever |
9 |
7 |
11 |
3 |
1 |
1 |
0 |
1 |
0 |
0 |
0 |
2 |
35 |
6 |
Chicken pox |
2 |
0 |
2 |
0 |
0 |
1 |
0 |
1 |
3 |
0 |
0 |
0 |
9 |
7 |
Malaria |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
1 |
0 |
0 |
1 |
8 |
Enteric fever |
1 |
3 |
0 |
3 |
0 |
0 |
0 |
2 |
7 |
24 |
9 |
8 |
57 |
9 |
Mumps |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
1 |
0 |
0 |
0 |
1 |
10 |
Meningitis |
0 |
0 |
2 |
0 |
1 |
0 |
0 |
0 |
2 |
2 |
0 |
1 |
8 |
Total |
58 |
21 |
38 |
18 |
14 |
12 |
5 |
11 |
26 |
42 |
30 |
44 |
319 |
Source: RDHS Office, Mannar
Hazards that the district is prone to, and the assessment of the potential risk
Disaster |
Types of disaster |
Priority in the current year |
Potential Risks Involved |
Remarks |
Disease Outbreaks (Dengue, Cholera and diarrhea) |
Natural in nature/ results of human action |
High |
Death |
Mannar district is prone to dengue, cholera and diarrhea outbreak especially after the rainy season. Due to the improper sewage and drainage system and lack of garbage disposal facilities, Mannar Town DS division (Mannar Island) faces issues. As Mannar town is lower than the sea level, constructing a proper drainage system is a big challenge. |
Sickness |
||||
Loss of income |
||||
Drought / Prolonged dry spell |
Natural in nature |
Medium |
Crop destruction |
Many parts of the district have experienced dry spells, leading to destruction of crops and food insecurity among the population. |
Hunger |
||||
Loss of Human Lives |
||||
Loss of animals |
||||
Floods / Water logging |
Natural in nature |
High |
Death |
Several parts in Mannar districts are prone to floods and water logging due to continuous rain. However, major floods situations are caused by overflowing water from tanks in other districts especially during Oct – Feb. |
Disease outbreak |
||||
Impeded movements |
||||
Destruction of properties |
||||
Tsunami |
Natural in nature |
Low |
Death |
Tsunami will create much greater destruction to the district as almost every DS division except Madhu has a long costal belt. Fishing is the main income generation activity in the coastal areas. Tsunami can cause mass destruction to the life and livelihood and infrastructure to the population. Especially, Mannar Island is very vulnerable for Tsunami. |
Loss of properties |
||||
Loss of income |
||||
Disease outbreak |
Probability of occurrence of the top 4 hazards in Mannar
Hazards |
Probability score |
Disease Outbreaks (Dengue, Cholera and diarrhea) |
3 |
Floods/Water Logging |
3 |
Drought / Prolonged dry spell |
2 |
Tsunami |
1 |
Relative degrees of potential impact
Hazards |
Size of population |
Potential lethality |
Potential destruction of critical infrastructure |
Disease Outbreak |
2 |
2 |
0 |
Drought /Prolonged dry spell |
2 |
2 |
0 |
Floods/Water logging |
3 |
1 |
2 |
Tsunami |
3 |
3 |
3 |
3- High
2- Medium
1- Low
0- not applicable
1.3.4 Other emergencies and disastrous situations that can happen
(Other emergencies and disastrous situations which have not occurred in the division before, but could happen in the future due to the following reasons could also be responded to, using this plan)
Disaster Category |
Possible Crisis or Emergency Situation |
Disasters related to natural causes, but induced by human activities |
Blockage of surface water drainage Floods due to filling of flood retention low land Reservoir and dam related floods Destruction of flood retention bunds an dikes in rivers |
Due to technological causes |
Collapse of old building or other permanent structure Major fire, Gas/ petroleum/ chemical leak or pipe burst Major rail or road accidents Explosion of a fuel browser Contamination of drinking water sources Plane crash Collapse of bridges and elevated water tanks |