யுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என 200ககும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

IMG 2c48d32c1a406b9ac29bcd743f1fd26e V

IMG 4bf3bdb8add48cab3b4e4f8a537882a7 V

 

IMG ccff740e32b599ef9735a22a0fd68971 V