மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை  தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட  திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.

DSC 0143

 

DSC 0154

 

DSC 0151

 

DSC 0150

 

DSC 0206

 

DSC 0228

 

DSC 0250

 

DSC 0251

 

DSC 0233