மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது . 

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில்  சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்  திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .

காலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .