மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக "தொழில் வழிகாட்டல் வாரத்தை" இவ்வருடம் ஒக்டோபர் 04ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை நடாத்துவதற்கு மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை(Online) முறையினூடாகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு திறந்த போட்டிகளுமாக சித்திரம், கவிதை, கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகளை நடாத்த மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி ஆகஸ்ட் 23ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் online ஊடாக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு மாவட்ட செயலக மற்றும் தத்தமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேலதிக தகவல்களை பெற மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தருடன் 0770743231/ 0771157433 தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொள்ள முடியும்.

மேலதி தகல்கள் இத்துடன் இணைக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் விளக்கமாக உள்ளது.

தாமதியாது உடன் விண்ணப்பியுங்கள்.

234739904 1194508221033036 1640088424567894898 n

240593336 1194508257699699 5642389674585842860 n