மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழா.

மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவும் சாதனைப்பெண்கள் கௌரவிப்பு விழாவும் 08.03.219 அன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி.  குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ. மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ் வசந்தகுமார், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிறின்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர். 
இவர்களுடன் மன்னார் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலர்கள், மன்னார் நகர பிரதேச செயலக அலுவலர்கள் , மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், சிறப்புரை என்பவற்றுடன் மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பெண்களுக்கு 'சாதனைப்பெண்கள்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


ஹிட் (HIT) சந்தைப்படுத்தல் நிறுவனம், வேல்ட் விசன்  , TVS, ஒஸ்ரியா நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டன.

 

 20190308 112039

 

20190308 110026

 

20190308 112039

 

மனானார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டில் சாதனைப்பெண்கள் விருதினை பெற்றுக்கொண்டவர்கள் விபரம்
1) வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரெலா யூட்  ரதினி (மருத்துவ துறை: இளைப்பாறிய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
2) திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் (கல்வித்துறை : இளைப்பாறிய மன்னார்,மடு வலயக்கல்விப் பணிப்பாளர்)
3) திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் (கல்வித்துறை : இளைப்பாறிய மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்)
4) திருமதி விக்ரர் பெப்பி பெப்பெற்றுவா மதுரநாயகம் பீரிஸ் ( கல்வித்துறை, எழுத்தாளர்: இளைப்பாறிய உதவிக்கல்விப்பணிப்பாளர்)
5) திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் (நிர்வாகத்துறை: மேலதிக பிரதம செயலாளர். வட மாகாணம்)
6) கலாநிதி திருமதி கிமலதா ராஜேஸ்வரன் (கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண் - மன்னார் மாவட்டம்)7
7) செல்வி வெற்றிச்செல்வி சந்திரகலா (எழுத்தாளர், உளசமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சார் செயற்பாட்டாளர்)
8) செல்வி அன்ரனி ஜெனிபர் அருள்மொழி லம்பேட்( மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர். பாடகி, எழுத்தாளர்)
9) திருமதி நேசராசா சுகந்தினி (மாற்றாற்றல் உள்ள பெண், பரா ஒலிம்பிக் 2020ற்கு தெரிவாகியுள்ளவர்)
10) செல்வி  செபமாலை பெனடிற்றா (மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர்)
11) செல்வி மரியநாதன் ஜேசப்பின் பிரஸ்ஷh லேனா (ஊடகத்துறை - நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
12) திருமதி எம். கௌரி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
13) திருமதி செலமன்ராஜ் சுபாஜினி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
14) திருமதி  வீரபுத்திரன் கலாதேவி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
15) திருமதி விக்கிரமசிங்க சவரியம்மா (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
16) செல்வி பாலகிருஸ்ணன் பிரியங்கா (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
17) செல்வி சந்தியோகு ஆன் பைரவி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
18) செல்வி சௌந்தர்ராஜன் பிரியதர்சினி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
19) திருமதி ரமேஸ் வசந்தராதேவி (சமூக சேவையாளர்)
20) திருமதி செயஸ்ரியாம்பிள்ளை சத்தியகுமாரி (சமூக சேவையாளர்)