ஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம்

ஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் கடந்த 16.03.2019 சனிக்கிழமை அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உள்ளக, உள்நாட்டலுகல்கள் , மாகான சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரைக்கு இணங்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட செயலக காணி பதிவகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 
விருந்தினர் வரவேற்பு, வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக உறுதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்த இருவருக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திணைக்கள தலைவர்கள் சட்டத்தரனிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

AA1

AA5

AA7

 

AA9

AA10

 

AA8